இந்திய தொலைகாட்சிகளை நாம் அடிகடி குறை கூறி வருகிறோம் .காரணம் இந்திய தொலைகாட்சி சேனல்களால் இலங்கை படைப்பாளிகளின் திறமைகள் மறைக்கபடுகிறது.
இலங்கை தமிழ் தொலைகாட்சிகளில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கின்ற போதும் மக்களிடையே கலகலப்பாக பேசக்கூடியவர் UTV பாடகர் சுலக்ஷன் அசோகன்.
நமக்கு திறமை இருக்கிறது எம்க்கு நல்ல ஒரு களம் இல்லாதது தான் பிரச்சனை என்கிறார் .
நமக்கு தேவையான களத்தை நாமே அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்திய தொலைகாட்சிகள் எமக்கு தெரியாமலையே எம்மை முட்டாளக்கிறது என்றும் எமது எதிர்கால சந்ததியினரை பயங்கரமான நிலைக்கு கொண்டு செல்வதாகவும் சுலக்ஷன் கூறினார் .
நிதி ரீதியாக எமக்கு எமது படைபாளிகளுக்கு உதவி கிடைத்தால் நிச்சயமாக மக்களை நமது பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும் என்றும் கூறினார் .
பாடகர் சுலக்ஷன் அசோகன் தொடர்ந்து சிறப்பாக தனது கலை துறையில் பிரகாசிக்க www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.