ஆணானேன் பெண்ணால்!
ஒருமுறை கண்சிமிட்ட ஒன்பதாயிரம் மின்னல்கள்!
அன்னையால் ஆளானேன்
அவளால் நான்
ஆணானேன்!
பெண்மையின் ஆண்மை
அறிந்தேன்
ஆளானேன்!
அவளின் மென்மையால்
நான் ஆணானேன்!
உதிரம் திரித்த பாலுண்டேன்
ஆளானேன்!
ஊடல் களைத்து
காதல் கொண்டேன்
ஆணானேன்!
ஒருமுறை கண்சிமிட்ட ஒன்பதாயிரம் மின்னல்கள்!
பசியோடு நிலாவும்
பாற்சோறும் அன்னையும்
ஆளானேன்!
அன்பால் உலாவும் அவளும் ஆசையும்
ஆணானேன்!
வெந்நீரும் நல்லண்ணெயும்
ஆளானேன்!
வெட்கத்தில் நலினம்
ஆணானேன்!
“அதோ பார் ஒட்றைக்கண்ணன்”
கதைக்கேட்டு ஆளானேன்!
பரிசோதனை பயத்தில் ஆணானேன்!
தன்னலமற்ற தாய்மையால் ஆளானேன்!
தலையனை சண்டையில்
ஆணானேன்!
அன்னையில் ஆளாகி
அவளில் ஆணானேன்!
ஆளாகி ஆணானேன்
அவளால் உயிர்க்கொண்டேன்
இவளுக்காய்!
பெண்ணன்
நான்-தயா”
குமாரவேல் தயாநீதிபாபு, வொஞ்சார் லோவர் லோரன்ஸ், நோர்வூட். KUMARAVEL RASIKANTH, VENTURE LOWER LOWRANCE, NORWOOD..