தர்ஷன் தர்மராஜ் நாளையுடன் அவர் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது புகழ் இன்னும் எம் காதுகளில் ஒலித்து கொண்டு தான் உள்ளது.
நேற்றைய தினம் அவரது உடல் ஜெயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்ட போது சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அதில் மிகவும் உருக்கமான சம்பவம் அவரது நெருங்கிய தோழியும் சக நடிகையுமான நிரஞ்சனி சண்முகராஜா ஊடகங்களுக்கு அழுகையுடன் பேசியது தான்.
சிங்கள சினிமா துறையில் தமிழ் மன்னன் மறைந்து விட்டார் என கூறினார்.
தர்ஷன் தன்னிடம் கடைசியாக கூறியது “நிரா எம் மீது அன்பு காட்டியது சிங்கள மக்கள் மட்டுமே” என்று தர்ஷன் கூறியதை ஞாபகப்படுத்தினார் .