22/9/2022 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் கூட்டுத்தாபன ஆலோசகர் கலாபூஷண A மகேந்திரன் நெறியாள்கையில் மதுரகீதங்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் dr ரகுபரன் அவர்கள் அறிவிப்பாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு ஆற்றிய சேவையை பாராட்டி அமுதக்குரல் கே ஜெயகிருஷ்ணா, செந்தமிழ் அரசி நாகபூஷணி கருப்பையா என கௌரவ பட்டங்கள்
வழங்கினார்.
அவர்களுக்கு கூட்டுத்தாபனத்தின்தலைவர் ஹட்சன் சமரசிங்க அவர்கள் தங்கப்பதக்கங்களையும் வழங்கி இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தென்றல் fm சிறந்த 5 ரசிகர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டமை மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்ச்சியில்
பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இசைக்குழு ரட்ணம் Band இசை வழங்க இசையமைப்பாளர் A மகேந்திரன் கண்ணே கலைமானே என்ற தமிழ் பாடலை சிங்களத்தில் பாடி அனைவரையும் மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்