உடனடியாக செய்திகள் சேகரிப்பதும் அவற்றை சரியான நேரத்தில் மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதும் சாதாரண விடயமல்ல.
இன்று செய்திகளின் முக்கியத்துவம் என்பது கவனத்தில் எடுக்கப்படுகிறது.
ஆகவே தான் தற்போது ஊடகங்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பல ஊடக போட்டிகள் நடுவே டேன் நியூஸ் சமீபத்தில் தலைநகர செய்திகளை உடனுக்குடன் வழங்க தலைநகர UPDATE என்ற உடனடி செய்தியை ஆரம்பித்தது.
நிறுவன தலைவர் குகநாதன் அவர்களது யோசனையில் உருவான இந்த புதிய செய்தி அம்சத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அப்படி என்ன தான் செய்கிறார்கள்.யார் இதை செய்கிறார்கள் என்று நாம் விசாரித்தோம்.
ரவிவர்மன்,கோகிலவாணி,விதுஷா என்ற இந்த மூவரும் தான் தலைநகர UPDATE செய்தி கோவையை செய்து வருகிறார்கள்.
உண்மையில் இவர்கள் திறமையை பாராட்டி தான் ஆக வேண்டும்.
10 பேர் இருக்கும் செய்தி பிரிவுகளால் ஒன்றும் சாதிக்க முடியாத நிலையில் இந்த மூவரும் சாதிப்பது சிறப்பு.
இந்த மூவரது அணியின் ரகசியத்தை கேட்டோம்…..அதற்கு அவர்கள் சொன்ன பதில் “நாங்க மூவரும் ஒரே நேரத்தில் முடிவெடுத்து செய்திகளை வெளியிடுவோம்…ஆகவே தான் எங்கள் தலைநகர UPDATE மக்கள் மத்தியில் பேசப்படுகிறது” என்று சொல்லி முடிக்க நாமும் கேட்டு எழுதுகிறோம்.
டேன் நியூஸ் கொழும்பு பிரிவின் தலைநகர UPDATE குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.