அபர்ணா ஆரம்பித்த புதிய சேனல் | ஓன் One ஆகுமா?

அபர்ணா ஆரம்பித்த புதிய சேனல் | ஓன் One ஆகுமா?

உலகம் வேகமாக செல்கிறது. மக்கள் தங்கள் தேவைகளை மிக வேகமாக முடிக்க பார்கிறார்கள்.

இதன் நடுவே சற்று பொழுது போக்க தொலைக்காட்சி பெட்டியை போட போனால் மின்சார பிரச்சினை.

வானொலியை போட்டால் ஒரே அலட்டல்.

இதற்கு சரியான தீர்வு இணையத்தளம் தான் என்ற முடிவுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது.எனவே தான் மக்களது ரசனையை புரிந்து கொண்ட ஊடக நண்பர்கள் Facebook,you tube, Instagram, tic tok என்று பல வழிகளில் மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்கள் .

இறுதியாக இந்த ஓட்ட பந்தயத்தில் நுழைந்தவர் இலங்கை வானொலி பிரியர்கள் பெரிதும் விரும்பி கேட்ட குரல் கொண்ட RP அபர்ணா சுதன்.

கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி அவர் ஆரம்பத்த புதிய You Tube சேனல் பெயர் சேனல் ON.

இலங்கையின் மிக ரசிக்க கூடிய இடங்களுக்கு சென்று அங்குள்ள சிறப்புக்களை வர்ணனை செய்கிறார்.

பாரம்பரிய கிராமத்து கலைகளையும் அந்த கலைஞர்களையும் வெளிக் கொண்டு வந்தது பாரட்ட தக்க விஷயம்.

இதுவரை 300 சந்தாகாரர்கள் புதிய சேனலை பின் தொடர்வது மகிழ்ச்சி.

அபர்ணாவின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் இணையத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!