19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி வீராங்கனை
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் குழாமிற்கு வீராங்கனை ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய அணி குழாமிற்கு தெரிவாகிய மாணவி சதாசிவம் கலையரசி அவர்களுக்கும் ஊக்கப்படுத்திய பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்
மாணவியை பயிற்றுவித்த
பாடசாலை பயிற்றுவிப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், மாகாண பயிற்றுவிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினர் என அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்