என் தந்தை பகல் செட்டுக்கு சென்று பெற்றோல் நிரப்பி வருவதாக கூறி சென்றார்.
மாலை அவர் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினார் என்று ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த சமிந்தவின் மகள் முதற் தடவையாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார் .
தனக்கு பணம் தேவையில்லை என்றும் மாறாக நடைபெறும் விசாரணைகளின் மூலம் நீதி கிடைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.