தமிழ் சினிமாவில் தடம்பதித்துள்ள இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜே.சமீலின் இசையில் கவிஞர் அஸ்மினின் வரிகளில் புதிய பாடல் ஒன்று தயாராகி வருகிறது
பாடலை பாடியுள்ளார் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் மரியாதைக்குரிய T.ராஜேந்தர் அவர்கள்.
பாடலில் துணை நிற்கும், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் நண்பர், எஸ்.சக்திவேல், நண்பர் வேல் ஒன்றானவன், சப்னா தெளபீக் , ஆகியோரும் அஸ்மினின் வேண்டுகோளை ஏற்று இந்த பாடலுக்கு தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் மீதான ஆழ்ந்த அன்போடு பாடலைப் பாடித் தந்தமைக்கு மரியாதைக்குரிய கலைஞர் T.ராஜேந்தர் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதாக கவிஞர் அஸ்மின் தனது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடல் வெற்றி பெற நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்