ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4 ஆம்திகதி காலை 6 மணி வரை, பொது வீதிகள் , பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், ரயில் பாதைகள், கடற்கரை போன்றவற்றில் எவரும் செல்வதைத் தடை செய்யும் வகையில் குறித்த விசேட வர்த்தமானி அரசால் வெளியிடப்பட்டது.
மேலும், குறித்த பகுதிகளில் பயணிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் எழுத்துப்பூர்வ அனுமதி கட்டாயமானது எனவும் குறித்த வர்ததமானியில் குறிப்பிடப்பட்டுள்ளத
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை எந்தவொரு பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது ஏனைய மைதானங்கள், புகையிரதங்கள், கடற்பரப்புகளில் எவரும் செல்வதைத் தடைசெய்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Gazette Extraordinary issued by President prohibiting anyone from being on any public road, park, recreation or other grounds, railways, seashore etc from 6.00 pm on 02 April to 6.00 am of 04 April, unless with written permission granted by authorized officers.