நுகேகொடையில் விஜயராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்று வருகின்றது.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மற்றும் அருகிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லம் வரை போராட்டம் சென்றடைவதாக வெளியான தகவலையடுத்து மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தடுப்பு கம்பங்களும் வைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.