மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பிரிவத்த வீதிக்கு அருகாமையில் இன்று (31) இரவு 7.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பமானது.
தொடர்ந்து அங்கு ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
போராட்டம் காரணமாக மஹரகம – மிரிஹான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.