கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் கூகுள் குட்டப்பன் படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. லாஸ்லியா, தர்ஷன் நடித்துள்ள, இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கூகுள் குட்டப்பன் படத்தின் நிகழ்வில் கதாநாயகி லொஸ்லியா தன் கூட நடித்த ஹீரோ தர்ஷனை மறந்துவிட்டு இறுதியாக தான் அவரை நினைவு படுத்தினார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான கூகுள் குட்டப்பன்’ கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மார்ச் 14-ஆம் தேதி வெளியாகியது.மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.