இலங்கையில் அனிமேஷன் குறும் படம் துறையில் இதுவரை நடக்காத புதுமை ஒன்றை நாளைய தினம் நாம் பார்க்க இருக்கின்றோம்.
KEN Entertainment நிறுவனர் மற்றும் 3D ,VFX துறைகளில் டிப்ளோமா பெற்ற கெனிஸ்டன் ஜோன் தனது ”BOOZER” அனிமேஷன் குறும் படத்தை நாளைய தினம் வெளியிட உள்ளார் .
இதன் சிறப்பு காட்சி கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெறவிருக்கும்
AMDT Show Case 2019 இல் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது .
இந் நிகழ்வில் சிறப்பு காட்சியாக ”BOOZER” இலங்கையின் முதலாவது அனிமேஷன் குறும் படம் திரையிடப்படவுள்ளது.
தலை சிறந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும்
3D ,VFX துறைகளில் சாதனை படைத்தவர்கள் கூட எடுக்காத முயற்சியை கெனிஸ்டன் ஜோன் எடுத்துள்ளார் .
கெனிஸ்டன் ஜோன் மற்றும் ”BOOZER” இலங்கையின் முதலாவது அனிமேஷன் குறும் படகுழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.