மட்டக்களப்பில் முதல் முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” படத்தை இயக்கிய எஸ்.என்.விஷ்ணுஜனின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
LERO Productions சார்பில் LEROCIYAN TJ தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் டரில் டியூக் கதாநாயகனாக நடிப்பதுடன், அச்சுதன் அழகுதுரை ஒளிப்பதிவையும், கேசாந்த் இசையமைப்பையும் மேற்கொள்கின்றார்.
படத்தின் டைட்டில் மற்றும் ஃபொஸ்ட்லுக் என்பவற்றுடன் அதில் பணியாற்றும் ஏனையவர்களின் விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து முழு நீளத்திரைப்படத்திற்கான முயற்சிகள் பல காலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் முதல் திரை கண்ட திரைப்படமாக வேட்டையன் விளங்குகின்றது.
மட்டக்களப்பை தொடர்ந்து வடக்கு, மலையகம், கொழும்பு என அதனைக் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், கொரோனா பேரிடர் காரணமாக அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.