முள்ளியளையில் “தெருமுகன்”…. முள்ளியளை இளங்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசமான குறும்படம் தான் “தெருமுகன்” இக் குறும்படமானது முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு படைப்பாகவே அமைந்துள்ளது.
சிதைந்த மனிதனின் இருண்ட கதை போல் பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாமென அலையும் ஒரு கூட்டத்திற்கு நெத்தியடியாகவும் அமைகிறது. ஏழை என்றால் கோழை என்றும் அர்த்தமில்லை என்பதையும் உணர்த்தும் குறும்படமாகவே வெளிவர இருக்கிறது. இக் குறும்படத்தை இளம் இயக்குனர் வர்மனின் திரைக்கதை/வசனம்/இயக்கத்தில் அமைந்துள்ளது.
இவரின் பல குறும்படங்கள் வித்தியாசமானதாகவே வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக் குறும்பத்தை சிவம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.இக் குறும்படத்தில் டிருசாந்/பிந்துசன்/இராகவன்/சாமிலன்/ஆகிய இளங்கலைஞர்களின் நடிப்பிலும் மேலும் பல மூத்த கலைஞர்களும் இணைந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் படைப்பு சாமிலன்/அபிலக்சன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும் வர்மனின் ஒளித்தொகுப்பிலும் ராகுலின் இசை மெருகூட்டலிலும் உருவாகியுள்ளது. போதிய வசதிகள் அற்ற நிலையில் தம்மால் முடிந்தவற்றை முயற்சித்துள்ளனர்.
தெருமுகன் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.