தலவாக்கலை லோகி தோட்ட பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்த 200 வருடம் பழமைவாய்ந்த ஆல மரமொன்றினை வெட்டிக்கொண்டிருந்த போது, கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் லோகி தோட்டத்தை சேர்ந்தவரும், தலாவக்கலை தேசிய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் அவர்கள் உயிரிழந்த செய்தி எம்மை மிகவும் துயரத்திற்குள்ளாக்கியது.
இன்றைய தினம் அன்னாரின் இறுதி சடங்கு நடந்தது. மலையக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள் .இருந்தும் என்ன பயன் ?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை துரிதமாக கண்டறிய இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச செயலளார், பிரதி பொலிஸ் அத்தியட்சகர், நகர சபை தலைவர் மற்றும் ஏனைய அதிகாரிகள் முன் வர வேண்டும் .
மலையக தலைவர்கள் ஆசிரியர் மகேஸ்வரன் குடும்பத்திற்கு என்ன செய்ய போகிறார்கள்?.
இனியும் இப்படி நடக்காமல் இருக்க இவர்களால் என்ன செய்ய முடியும் …பொறுத்திருந்து பார்ப்போம்