“உற்பத்தி உயர்கிறது. தொழிலாளியின் வாழ்நிலை உயரவில்ஸையே?”
- பெருந்தோட்ட அமைச்சரை இடைமறித்து மனோ கேள்வி
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பெருந்தோட்ட துறையில் தேயிலை அதிகரித்துள்ளது என இன்று சபையில் பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறிய பொழுது, இடைமறித்த
தமுகூ தலைவர் மனோ கணேசன்,
“நெருக்கடிக்கு மத்தியிலும், பெருந்தோட்ட துறையில் உற்பத்தி உயர்ந்துள்ளாக கூறுகிறீர்கள். நல்லது.
ஆனால் அங்கே உழைக்கும் தொழிலாளரது வாழ்நிலை உயரவில்லையே? அதுபற்றி கவனத்தை செலுத்துங்கள். தொழிலாளருக்கு நாட்சம்பளம் 1000 ரூபா என்று கூறி வருடங்கள் பல உருண்டோடி விட்டன.
ஆனால் உண்மையாக 1000 கிடைக்க வில்லையே? தனிப்பட்ட முறையில் உங்களை நானறிவேன். உங்கள் நேர்மை பற்றி எனக்கு நம்பிக்கை உள்ளது. தோட்ட கம்பனிகளை அழைத்து 1000 ரூபா கட்டாயம் தர சொல்லுங்கள். நாங்கள் எதிரணி அல்லவா? நீங்கள்தானே அரசாங்கம்? உங்களிடம்தானே அதிகாரம் உள்ளது?