WOOD PECKER PRODUCTION சார்பில் பரிஸ்ராஜ் தயாரிப்பில் ராஜேஸின் இசையில் வெளிவந்த பாடல் “கெத்து மாமு”. இந்தப்பாடலை மாலவன் எழுதியுள்ளதுடன் ஜெகதீஸ் பாடியுள்ளார்.
காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலை லீ முரளி இயக்கியுள்ளார். கார்த்திக், ரெமோ நிஷா மற்றும் பல நடனக்கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். பாடல் ஒளிப்பதிவு அலெக்ஸ் கோபி, படத்தொகுப்பு கதிர். நடன இயக்கம் அல்விஸ் கிளின்டன்.
“போதை” பாடல்களுக்கு என்றுமே செம கிக் இருக்கின்றது. அந்த வகையில் “கெத்து மாமு” பாடலும் கலக்கல் குத்து பாடலாக வெளிவந்துள்ளது. இந்தியக் குத்துப் பாடல்களைப் போல இந்தப் பாடலும் இனிவரும் காலங்களில் இளைஞர்களின் டான்ஸ் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.