தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு பெயர் வைப்பது என்பது சாதாரண விடயமல்ல.
தேடி பார்த்து , ஆராய்ந்து , வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
என்ன கொடுமை என்றால் நமது நாட்டில் இருப்பதே விரல் விட்டு எண்ணக்கூடிய தொலைக்காட்சி சேவைகள்.
இருப்பினும் அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய தொலைக்காட்சிகளில் போகும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.
இப்படி நிகழ்ச்சிகளுக்கு ஒரே பெயர்கள் வைக்க என்ன காரணம்?.ரசிகர்களை முட்டாளாக்கும் ஒரு நோக்கமா ? இல்லை போட்டிக்கா என்று தெரியாது.
இருப்பினும் பெரிய லெஜெண்டுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பண்டிதர்களாக இருந்தால் மட்டும் போதுமா? தேடி பார்க்க வேண்டாமா?