விருதை எதிர்த்த வில்லன் | விருதுகள் வியாபாரமாகிறதா?

விருதை எதிர்க்கும் வில்லன் | விருதுகள் வியாபாரமாகிறதா?

விருது வழங்கும் விழாக்கள் தொடர்பாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

அதுவும் தகுதி இல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாக எமது கண்ணகி கலாலயம் இளங்கோ தெரிவிக்கிறார்.

விருதுகள் வியாபாரமாகிவிட்டதாக அவர் கூறுகிறார்.இது தொடர்பாக அவரது முகப்புத்தக பதிவு இவ்வாறு உள்ளது.

அண்மையில் நடந்த விருது விழாவில் நம் நாட்டு சிரேஷ்ட கலைஞர்கள் சிலர் உட்பட …. பலருக்கும் விருதுகள், பட்டங்கள், சான்றிதழ்கள் என வழங்கப்பட்டது. இது தேசிய விழான்னு கூட ஒரு பிரச்சாரம்கொய்யாலே தேசியம் என்பது என்ன என்று தெரியுமா?அதை பெற்ற ஒரு சிரேஷ்டரின் வாழ்த்து இப்படி இருந்தது. எழுத்துப்பிழை, சொல் பிழை, அதனால் ஏற்படும் பொருள் பிழை என்பதை அறிய வேண்டும் அந்த ஏற்பாட்டாளர்.. கலைஞர்கள்தானே பிழைத்துப்போகட்டும் என்று பிழையாக எழுத்துக்கள் எழுதி கலைக்கும் கலைத்துறையையும் பிழையான பாதைக்கு வழிநடத்தப்படுகிறது என்பதை விழிப்புணர்வுடன் உணர்ந்தால் நல்லது.. நம்மல வச்சி அரசியல்வாதிகளும் சில ….. களும் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.. நம்மில் சிலர் சும்மா கொடுத்தா கொரனாவ கூட வாங்கிக்கொள்வாங்க…முதலில் வழங்குவது யார் அதற்கு அவருக்கு என்ன தகுதி.. நம்மோடு பெறுவது யார் அவருக்கு என்ன ஆற்றல் உள்ளதென்பதை நம்மவர் அறிதல் நல்லது.திரைப்படம் திரை படம் என்று நமக்கு படம் காட்டுபவருக்கும் மேடை நாடகத்தை மோட நாடகம் என்று எழுதுபவருக்கும் எமது கலைத்துறைப்பற்றி அறிந்திருக்க வாய்பில்லை..தலைநகரில் கலைஞர்கள் யார் யார் என்பது பற்றி கூட தெரியாவர், இங்கே எத்தனை சங்கங்கள் இயங்கியது. அதனூடாக கடந்த காலங்களில் செயல்ப்படுத்தப்பட்ட திட்டங்கள் எவை என்பது கூட அறியாத இவர். மேடையில் நின்று தான் செய்யும் விழாவே பெரிய நிகழ்வு இதற்கு முன்னாள் எவரேனும் செய்தார்களா என சவால் விட்டாராம்?

அப்போ சிலோன் ஆர்ட்ஸ் ஸ்டேஜ் குழுவினர் 1999 ல் செய்த கலை நிகழ்வுடன் கலைஞர்கள் விருது விழா தெலுங்கு காங்கிரஸ் அமைப்பு நடத்திய விழா, கிருஷ்ண கலாலயம், வெள்ளி நிலா கலாலயம், புதிய அலை கலை வட்டம், இதைவிட அரச இலட்சினையுடன் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கியது 21 – 12 – 2015 N.M. Kala Ayathanaya இதை தேசியம் எனலாம் காரணம் சகல இனத்தவருக்கும் வழங்கப்பட்ட விருது கௌரவ நிகழ்வு. அத்துடன் இதில் கலை நிகழ்ச்சிகளும் இருந்தன.. வாழ்நாள் சாதனையாளர்கள், சாதனையாளர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் என தரம் பிரித்து ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் காணொலியாக காட்டியிருந்தோம்.

இவற்றை எல்லாம் தாண்டி எமது கண்ணகி கலாலயம் தலைநகரில் மட்டுமல்லாது 19 -04 -2017 திருக்கோவில் svo அமைப்புடன் இணைந்து வாழ்நாள் சாதனையாளர்களாக எமது பெருமதிப்பிற்குறிய கட்டற்ற கலை களஞ்சியமான பேராசிரியர் சி.மௌனகுரு ஐயாவிற்கும் பிரபல நடிகை மகேஸ்வரி ரட்னம் அவர்களுக்கும் வழங்கி இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பல கலைஞர்களுக்கு சாதனையாளர் விருது, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு விருது என்று தரம் பிரித்து வழங்கி இருந்ததுடன் கிராமிய கலை, கூத்துக்கலை, இலக்கியம், இசை, நடிப்பு என பல்துறை சார்ந்தவர்களுக்கும் வழங்கி இருந்தோம். குறிப்பாக விருதை வியாபாரமாக்கவும் இல்லை எவரிடமும் பணம் பெறவும் இல்லை.. வாழும் காலத்தில் கலைஞர்களை போற்றுவோம் என்பதில் நாம் தெளிவாக செயல்பட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!