நாம் சில விடயங்களின் உண்மை தன்மையை அறியாமல் உடனடியாக அதை நம்பி விடுவோம்.
அதே நேரத்தில் அதை எங்கள் சமூக தளங்களிலும் பகிர்வது வழமையே.
இருப்பினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி நடனமாடுவது போன்ற ஒரு வீடியோவை கண் மூடித்தனமாக நம்பி உடனடியாக தாய் பகிர்வது முட்டாள் தனம்.
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.அதுவும் நமது நாட்டின் ஜனாதிபதி என்று சிலர் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பதிவிற்கு பிரதமரின் தொடர்பாடல் செயலாளர் G காசிலிங்கம் சிறப்பாக விளக்கியுள்ளார்.அதாவது அந்த நடனத்தில் இருப்பவர் நமது ஜனாதிபதி இல்லை என்றும் .உண்மை தன்மையை முதலில் அறியவேண்டும் என்று தயவு செய்து இந்த வீடியோ பகிர்வதை தவிருங்கள் என்றும் கூறியுள்ளார்.
மக்களே இனியாவது அவதானமாக இருப்போம்…