பிரசன்னா அன்டனி இயக்கத்தில் உருவான “ஆடை” குறுந்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஐந்து விருதுகள் பெற்றுள்ளன.
கோல்டன் ஸ்பேரோ சர்வதேச திரைப்பட விழா, உருவாட்டி சர்வதேச திரைப்பட விழா, அந்தமான் மற்றும் நிக்கோபார் சர்வதேச திரைப்பட விழா, மருதம் இண்டி திரைப்பட விழா மற்றும் இந்தோ சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெண்களுக்கான குறுந்திரைப்படம் எனும் வகையில் சிறந்த படத்திற்கான விருதுகளை பெற்றது.
“ஆடை” குறும்படம் அரசியல் தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை பற்றி பேசுகிறது.