சில படைப்புக்களை துல்லியமாக இயக்குவதில் கை தேர்ந்தவர் நிருஷாந்த்
நாங்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. உற்பத்திப் பணியின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மேம்படுத்தல்களுக்கு காத்திருங்கள்.இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் நிருஷாந்த்
ஒரு வருடத்திற்கும் மேலாக Nirushanth இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி, பல தடவைகள் உருவாக்கி, தனக்கு திருப்தி வரும்வரை “MR.X” படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இது நமது ஈழம் சினிமா. வர்த்தக சினிமாவிற்கு தேவையானதும், இன்றைய சினிமா ரசிகர்களை கவரக்கூடிய விடயங்களையும் இதில் உட்புகுத்தியுள்ளார்.
Sudio – 7 தயாரிப்பில், Nirushanth Narendran எழுதி இயக்கி, ஒளிப்பதிவு, மற்றும் எடிட்டிங் வேலைகளையும் அவரே செய்துள்ள இப் படத்திற்கு Priyananth இசையமைத்துள்ளார்.
உடை, ஒப்பனை – Divatharsiny, AD-Kingsley, Production Designing-Erosha என பலபேருடன் நானும் எனது பங்களிப்பை செய்துள்ள இப்படம் இவ்வருட ஆரம்பத்தில் திரைக்கு வரவுள்ளது.