இலங்கை கலைஞர்களின் மிகப்பெரிய பக்க பலமாக திகழ்ந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கனகரட்ணம் அரசரட்ணம் அவர்கள் எம்மை விட்டு பிரிந்துவிட்டார்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அவரின் பிரிவு தொடர்பாக சிரேஷ்ட கலைஞர் சந்திரசேகரன் அவர்கள் இரங்கல் பதிவை இட்டுள்ளார்.
கே.அரசரட்ணம் அவர்கள் காலமான தகவல் அறிந்து மனம் கலங்குகிறது.1960கனின் இறுதிப் பகுதியிலிருந்து எங்கள் வானொலி, மேடை நாடகங்களின் ரசிகர்.சபையில் முதல் ஐந்து வரிசைக்குள் ரசிகராக அமர்ந்திருப்பார்.
நல்லதொரு கலா ரசிகர். அந்த ரசிக்கும் ஆற்றல் தான் அவரை பிற்காலத்தில் நல்லதொரு நகைச்சுவைப் பேச்சாளராக மாற்றியது என நினைக்கிறேன்.பொலிஸ் திணைக்களத்தில் உயர் பதவியில் இருந்த போதிலும் எந்த பிரச்சினை என்றாலும், அவருடன் தொடர்பு கொண்டால் உதவும் மனித நேயமுள்ள ஓர் உயர்ந்த மனிதர் (உயரத்திலும்தான்).
இப்படிப்பட்ட நல்ல நண்பரை நாம் இழந்திருப்பது பேரிழப்பாகும்.அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!