ஈழத்து படைப்புகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என பலரும் கூறினாலும் அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கிறது.
நமது படைப்பாளிகளின் திறமைகளை சரியான முறையில் அறிந்துகொள்வது சாதாரண விடயமல்ல.
அதை தான் தற்போது டான் டிவி செய்து வருகிறது.டான் டிவியின் இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
இந் நிலையில் சினி மரதன் என்ற போட்டியை டான் டிவி நடத்தி வருகிறது.
இதில் களமிறங்கியுள்ள சசிகரன் தனது அணியுடன் நிகழ்ச்சி முன்னோட்டத்தில் தோன்றியுள்ளார்.
நிச்சயமாக இந்த போட்டியில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் பங்குபெறும் அனைத்து இயக்குனர்களுக்கும் அவர்களது குழுவுக்கும் எமது வாழ்த்துக்கள்.