சுயாதீன தமிழ் இளைஞர்களுடன் இணைந்து நமது திரைக்கலைஞர் சங்கத்தின் ( CAAV )அனுசரணையுடன் இயக்குனர் Mathisutha அவர்களுடனான வெந்து தணிந்தது காடு மற்றும் அவருடைய பிற படைப்புக்கள் சார்ந்த அனுபவப்பகிர்வு இந்த மாதம் பதினெட்டாம் திகதி, வருகிற சனிக்கிழமை, வவுனியா கலை நிலா கலையகத்தில் இடம்பெறவுள்ளது.
நமது கதைகளை சொல்வதில் உள்ள தடைகளையும், அவற்றை எதிர்கொண்ட விதங்களையும் பற்றி, தனது அனுபவங்களை நம்முடன் கலந்துரையாட இருக்கிறார்.
நாட்டின் சூழ்நிலைகள் காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆர்வலர்களை மட்டும் இணைத்துக்கொள்ள இருப்பதால் , கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழ் உள்ள கூகிள் விண்ணப்பப் படிவத்தினை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.