பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறியயவர் ஏறும்போது, யாழ்ப்பாணம் , அரியாலை என்ற இடத்திலுள்ள பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்துவிட்டுவிட்டார்.
கைப்பையின் உரிமையாளர் இதனைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஆனால் அந்த வழியாகச் சென்ற தியானேஸ் மதுசன் என்ற இருபத்திரண்டு வயது இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது.
எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும் , வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார். அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில்…
நேற்றுப் பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய் , செயற்பட்ட தியானேஸ் மதுசன் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது! வாழ்த்துக்கள் மதுசன் ! உங்களைப் போன்றவர்களால்தான் உலகம் சுழல்கிறது! இவரது இச் செயல் சமூகவலைத்தளங்களில் பாராட்டப்படுகின்றது….
09.12.2021 நேற்று மாலை 6.45 மணிக்கு யாழிலிருந்து கொழும்பு செல்லும் இ.போ.ச. பேரூந்தில் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் கைப்பை ஒன்று தவறி விட்டது. கண்டெடுத்தோர் பேருந்தின் நடத்துனர் திரு. ஜினைடீன் ரஸ்மிஅவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! தொடர்பு இலக்கம் – 075XXXXXXX என்ற எனது முகநூற் பதிவைப் பார்த்து , நூற்றுக்கும் அதிகமான நட்புகள் பொறுப்போடும் , கரிசனையோடும் பகிர்ந்திருந்தீர்கள் , உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்!
கைப்பையின் உரிமயாளர் கவனிக்கத் தவறிவிட்டார். ஆனால் அந்தவழியாகச் சென்ற தியானேஸ் மதுசன் என்ற இருபத்திரண்டு வயது இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது.
எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும் , வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.
அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில்… பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய் , செயற்பட்ட தியானேஸ் மதுசன் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!வாழ்த்துக்கள் மதுசன் !உங்களைப் போன்றவர்களால்தான் உலகம் சுழல்கிறது!