#நிலம் #TheLand குறும்படத்திற்கான விஷேட விருதை ஊட்டி குறும்பட விருது விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கையால் பெற்றுக்கொண்டேன்.

இப்படைப்பில் பணியாற்றிய தருணங்களை அந்த மேடையிலே எண்ணிப்பார்த்து பூரித்தேன். இயக்குனர், தயாரிப்பாளர், மற்றைய உடன் கலைஞர்கள் அனைவருக்கும் இவ்விருதை சமர்ப்பிப்பதாக இயக்குனர் ஜெனோஷன் ராஜேஸ்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சரின் கையால் ஈழத்தில் ஒரு படைப்பிற்கான விருது. குறும்படங்களும், பாடல்களும் விருதுக்கான அங்கீகாரத்தை தேடிய பின் ஒரு இயக்குனர் திரைப்படத்தை உருவாக்க களம் காண வேண்டும்.

இலங்கை தமிழ் சினிமாவில் சினிமாவும், நல்ல கதைகளும், வணிக வளம் கொண்ட நடிகர்கள் பிரபலமாகும் சூழலும் உருவாக இயக்குனர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கி சந்தைப்படுத்த தெரிந்தாலே போதுமானது.
எமக்கான சினிமாவை ஆயுதமாக ஏந்தி விடலாம்.இந்த மேடையில் இயக்குனர் ரவிஅரசு சொன்னார்.
குறும்படங்கள் உங்கள் உருவாக்க திறனுக்கான கோள் மட்டுமே. திரைப்படத்தை இயக்குவதற்கு களப்பணியின் அனுபவமும் , கதை விவாதத்தின் நுட்பமும் பெரும்பங்களிப்பு என்று. உண்மை தான்.
சினிமா தமிழகத்தில் இருப்பு கொண்டிருக்கிறது. இங்கே கற்று திரைப்படங்களில் உதவி இயக்குனர் என்ற அடையாளமோ அல்லது தேவையானதை கற்ற அங்கீகாரமோ கிடைத்தபின் ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம். இலங்கையில் சினிமா சார்ந்து கற்க அங்கே போலியான சினிமா தளங்களே உள்ளன.
#சினிமா #பெருங்கடல். அதைக்கற்று சிறிதளவேனும் தேர்ந்த பின் திரைப்படங்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.#நிலம் இந்த குறும்படத்தின் அங்கீகாரம் பெரிது. தமிழகத்தில் என் கைகள் உயர்த்திய முதல் விருது. #ஈழசினிமா / #இலங்கை_தமிழ்_சினிமா www.jenosanrajeswar.com
https://youtu.be/-edvE1Dh6rY
Kathir || Dr. M. Mathiventhan MLA || Nilgiri Film Club