வானொலிகள் அதிகமானால் பாடல்களும் அதிகமாகும் என்பது அந்தக்காலம்.
இப்பதெல்லாம் வானொலிகள் அதிகமானால் TIKTOK வீடியோக்களும் அதிகமாகவும் காலம் இந்தக்காலம்.
இன்று வானொலிகளில் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்கிறதோ இல்லையோ சமூக வலைத்தளங்களில் வானொலி பக்கங்களில் வீடியோக்கள் பட்டையை கிளப்புகிறது.
பொதுவாகவே வானொலி நிலையங்களில் அறிவிப்பாளர்களது நிகழ்ச்சி நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அவர்கள் TIKTOK வீடியோ செய்ய வேண்டுமாம்.
எல்லா அறிவிப்பளர்களும் TIKTOK வீடியோ போடுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதற்கு ஒரு மேற்பார்வையாளர் வேறு.
எது எப்படியோ நேயர்களுக்கு , சமூக வலைதள பாவனையாளர்களுக்கு நல்ல விருந்து தான்.