நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் மும்மொழிகளில் ஒரு இசைச் சங்கமம் தான் “அடி அடி தரிகிட”. பத்மயனின் இசையில் உருவான இப்பாடல் காதுகளுக்கு மட்டும் அல்ல கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் காணொளிப் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
தவ சஜிதரன், கீத்ம மதநாயகே மற்றும் பைரவி கந்தநேஷன் ஆகியோரது வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை வர்ஜிகன் கமலகந்தன், சமல் ஷவிந்த, மதுஸ்ரீ ஆதித்தன், பைரவி கந்தநேஷன் மற்றும் சிந்துஜன் வெற்றிவேல் ஆகியோர் பாடியுள்ளனர்.
தர்ஷன் (Standard Video 4K) ஒளிப்பதிவில் செந்தூர்செல்வனின் நடன அமைப்பில் உருவான இந்தக் காணொளிப்பாடலை கிஷாந்த் சிறி இயக்கியுள்ளார். படத்தொகுப்பு நிஷோ எஸ்.பி.