சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று (23) மாலை காலமானார்.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் இன்று மாலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.
நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தார்.