கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலய அதிபர் ஓய்வு பெற்றார் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலய அதிபராக பணியாற்றிய தாமோதரம்பிள்ளை கணேசபாலேந்திரன் (மந்துவில்) (SLPS I) இன்று முதல் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவரது 60வது பிறந்தநாள் 22 8 2021 ஞாயிற்றுக்கிழமை ஆகும். இவரது மணி விழா நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலையில் ஆசிரியர்கள் மட்டத்தில் எளிமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
பிறந்த நாள் நிகழ்வை தற்போது உள்ள சூழலில் முன்னெடுக்க முடியாது இருப்பதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் மகன் கலைவேந்தன் (புகையிரத நிலைய அதிபர்) தெரிவித்தார்.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்