ஈழப்புயல்கள் கலைக்கூடம் வழங்கும் யோகேஸ்வரன்(கனடா)அவர்களுடைய தயாரிப்பில் உருவாகும் காணொளி பாடல் தான் அன்னைமடி.
சஞ்சய் இயக்கத்தில் வெளியாகவுள்ள அன்னைமடி காணொளிப்பாடலின் முதற் பார்வை இன்று வெளியாகியது.
தாயக பாடலாசிரியர் ஈழப்பிரியன் வரிகளுக்கு தாயக இசையமைப்பாளர் முகிலரசன் இசை வழங்க தாய்த் தமிழக பாடகி சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில்
ஈழத்து முன்னணி நடிகை மிதுனா,பிரியா செல்வராஜ்,ஜெய்பிரசாத்,கனுஜன் மற்றும் கிறிஸ்னிக்காவின் நடிப்பில் றெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பில் விரைவில் வெளியாக உள்ளது.
பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்