மொழிவாணன் இலங்கை நாட்டுக்கு கிடைத்த ஒரு அற்புத படைப்பாளி.
பல மேடை நாடகங்கள் இன்றும் அவர் பெயர் சொல்லி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
விரைவில் அவரது மெகா சீரியல் ஒன்று வெளிவரவுள்ளது.டீக்கடை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று யாருக்கும் இது வரை தெரியாது.
டீக்கடை சீரியல் ஆரம்பத்திற்கான பூஜை செட்டியார் தெரு முத்து விநாயகர் ஆலயத்தில் நடந்தது.இதில் கலைஞர்களான கலைச்செல்வன் , மணவை அசோகன் , தேவர் முனிவர் உள்ளிட்டோருடன் டீக்கடை சீரியல் மொழிவாணனும் கலந்துகொண்டார்
முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் இந்த தொடரை தயாரிக்கிறார்.
நடிகர்களான விஜய் ,நந்தகுமார் ,தேவர் முனிவர் , கலை ஸ்ரீ ,மாக்ரட் , ஷாமிளா , இப்ளால் , எட்வர்ட் ஆகியோரின் நடிப்பில் வெளியாகவுள்ளது.
நாம் சொல்வது என்னவென்றால் இதற்கு அனைவரும் ஆதரவு தர முன்வரவேண்டும்.
நமது நாட்டின் மெகா சீரியல் தயாரிப்புகளுக்கு நமது தொலைக்காட்சிகள் நேரம் ஒதுக்கி தர வேண்டும்.
எப்படியோ இந்த முயற்சிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்