இலங்கையில் பல ஊடக நிறுவனங்கள் இருக்கிறது.அதுவும் ஒரு ஊடக நிறுவனத்திற்கு பல அலைவரிசைகள் உள்ளது.
ஒரு தொலைக்காட்சி , இரு வானொலிகளும் , இரண்டு தொலைக்காட்சி மற்றும் 3 வானொலிகளும் என்று பல விதமான வலையமைப்புகள் உள்ளது,
சுவர்ணவாஹினி நிறுவனத்தை அனைவரும் அறிவீர்கள்.ஒரு சிங்கள தொலைக்காட்சி , இரு சிங்கள வானொலிகள் மற்றும் 1 ஆங்கில வானொலி கூடவே தமிழ் FM மும் உள்ளது.
இது இப்படி இருக்க இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஊடக வலையமைப்பாக சுவர்ணவாஹினி நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.
இருப்பினும் துரதிஷ்ட வசமாக தமிழ் FM இன் உத்தியோகபூர்வ அடையாள இலச்சினை இல்லாமல் உத்தியோகபூர்வ பதாகை வெளியிடப்பட்டுளள்து.
இது தெரிந்து நடந்ததா? இல்லை தெரியாமல் தெரிந்து நடந்ததா? இல்லை தமிழ் வானொலியை புறக்கணிக்க வேண்டுமென்றே ஆகற்றப்பட்டதா? போன்ற கேள்விகள் எழுகிறது.
இதற்கான பதிலை நிர்வாகர்கள் சொல்லமாட்டார்கள்….அறிவிப்பாளர்கள் தான் சொல்லணும்…தமிழ் இல்லாத ஊடக அனுசரணையா?