அரச அடக்குமுறைகளுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை எதிர்க் கட்சி எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பதாதைகள் தமிழில் காட்சிப்படுத்தப்படாததால் மனோ கணேசன், விக்னேஸ்வரன் ஆகியோர் இடைநடுவே வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக த மு கூ தலைவர் மனோ கணேசன் அவர்கள் தனது முகப்புத்தக கணக்கில் பதிவிட்டுள்ளார்
சஜித் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.
“இனி தமிழ் தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது: ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்” என உறுதியளித்தார்.
ஆகவே விவகாரம் இத்துடன் முடிந்தது. இதற்கு முன்னும் இப்படி நிகழ்ந்தது. சொன்னேன்.
ஆனால், நான் எடுத்த எடுப்பில், எடுத்தேன், கவிழ்த்தேன், என அவசரப்படுவதுவது இல்லை.
அதேபோல், என்ன நடந்தாலும், வலிக்காததை போல் சும்மா இருப்பதும் இல்லை. எங்கே, எப்படி என பட்டறிவு கற்று கொடுத்திருக்கு..! எத்தனை பேரை கடந்து வந்த பட்டறிவு அனுபவம்..!