பரபரப்புடனும், பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 3.மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம்.பல சர்ச்சைகளுக்கு பிறகு முடிந்த இந்த பிக் பாஸ் மக்கள் மனதில் பிடித்த சீசனாக அமைந்தது குறிப்பாக கவின் லாஸ்லியா முகின் தர்சன் என பலர் மக்கள் மனதை வென்றனர்.
இந்தநிலையில் தற்போது தர்சன் பல பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்த விஷயம்தான்.தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இது குறித்து முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
எந்தவொரு காரணத்திற்காக உறவுகள் தோல்வியடைகின்றன என்பது அது அந்த இரண்டு நபர்களுக்கிடையில் உள்ளது. தனித்தனி வழிகளில் செல்வதே யதார்த்தமான தேர்வு. எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு மகிழ்ச்சியற்ற உறவில் இருப்பது சரியல்ல.
காயப்படுத்த எந்த நோக்கமும் இல்லை. இந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது, ஆனால் விஷயங்கள் ஆரோக்கியமற்றவையாகிவிட்டன.அவர்களால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என்னை வேண்டுமென்றே அழிக்கத் தொடங்கினர். குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை.
எனது கேரக்டர் ஊடகங்கள் மற்றும் உண்மைகளை அறியாதவர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நான் மிகவும் வேதனை அடைகிறேன்.இந்த காரணத்திற்காக சமூக ஊடகங்கள் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் விலகி நேரத்தை எடுத்துக் கொண்டேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் நிகழ்கின்றன.ஆனால் நான் இதிலிருந்து கற்றுக்கொண்டேன். என்று கூறியுள்ளார்…