சன்ஷைன் டி ஹர்ஷியின் இசையில் ரெஜி செல்வராஜாவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகும் புதிய காணொளிப் பாடலான “களவாணி கூட்டம்”. இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் எதிர்வரும் 4 ஆம் திகதி வெளியிடப்படும் என பாடல் குழு அறிவித்துள்ளது.
இந்தப் பாடலின் குரல் மற்றும் வரிகள் Swag Samrat & N.Praveen. அல்விஸ் கிளிண்டன், விது, MJ தம்பா, RK Stark ஆகியோர் நடித்திருக்கும் பாடலை இலங்கேயன் பிக்சர்ஸ் சார்பாக ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ளார் ரெஜி செல்வராஜா. டீசரைப் பார்க்கும் போதே தெரிகின்றது பாடலைப் படமாக்க அவர்கள் எடுத்திருக்கும் சிரத்தை!. கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் பாடல் வெளியாகும் என்பதில் ஐயமில்லை.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்