இலங்கையின் ஊடகத்துறையில் பாரிய மாற்றத்தை பலர் செய்துள்ளார்கள்.
அதில் டான் குழுமத்திற்கு மிகப்பெரிய பங்குண்டு.அதுவும் யுத்தத்திற்கு பிறகான காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல அலைவரிசைகளை கொண்டு இயங்கி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் புதிய அலைவரிசை ஒன்றை மாணவர்களுக்கு வழங்கி வைத்தது டான் குடும்பம்.
கல்வி 2 என்ற பெயரில் புதிய அலைவரிசையை விளையாட்டுத்துறை மற்றும் தொழிநுட்ப அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் டான் குழும தலைவர் குகநாதன் , பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் , மற்றும் பலர் கலந்துகொண்டு இருந்தனர்.
டான் குழுமத்திற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்.