இந்து ஆலயங்களில் கடமையாற்றும் இந்துக் குருமாரது விபரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் பௌத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக இலங்கையின் சகல மாவட்டங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் கடமையாற்றும் இந்துக் குருமாரது பின்வரும் விபரங்களை எதிர்வரும் திங்கட்கிழமை 28.06.2021 காலை 10.00 மணிக்கு முன்னர் அமைச்சில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
1.முழுப்பெயர் Full Name
2.தே. அ.அ இலக்கம்
N.I.C Number
3. பிரதேச செயலாளர் பிரிவு( முகவரி) DS Division (Address)
4.கடமையாற்றும் இந்து ஆலயம்Temple Name
5. ஆலய பதிவு இலக்கம்Temple Registration Number
6. தொடர் இலக்கம் Contact Number( இத்தகவல்களை அமைச்சுக்கு ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்)
இத்தகவல்களை வழங்குமாறு நேற்றய தினம் வடக்கு கிழக்கில் பிராத்திய அலுவலகங்களூடாகவும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் திணைக்களத்தினூடாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரை ஒரு சில மாவட்டங்களின் விபரம் மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இது மிக அவசரமான அவசியமான கோரிக்கை எனவே இந்து மத குருக்கள் அனைவரும் உங்கள் பிரதேச அலுவலகத்திற்கோ அல்லது கிராமசேவையாளரையோ தொடர்பு கொண்டு பதிவினை மேற்கொள்ளுங்கள்பொறுப்புணர்வுடன் தகவல்களை விரைந்து வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்