இதுவரை நடிகையாக அறியப்பட்ட க்ரிஷ் நலனி இயக்குனராக அறிமுகமாகியுள்ள “ஏனடி” பாடல் அண்மையில் வெளியாகியது. இந்தப் பாடலை நம் நாட்டின் நடிகர் ஜெறாட் நோயல் வெளியிட்டு வைத்தார். ஷமீலின் கலக்கல் இசையில் அமைந்த இந்தப்பாடலை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
முத்தங்கள் சத்தம் கொண்டு கானம் ஒன்றைப் பாட வந்தேன் தள்ளிப்போவதேனடி பக்கத்தில் நீயும் வந்தால் பற்றிக்கொள்ளும் பஞ்சும் தீயும் பாவம் இந்தப் பூங்கொடி
என ஆரம்பிக்கும் பாடல் இளங்காதலர்களின் காதலையும் தவிப்பையும் கூறுவதாக அமைகின்றது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஷமீலுடன் ஷாமிலா இணைந்து பாடியுள்ளார். முதல் பாடல் என்று தெரியாத அளவிற்கு அருமையாக இயக்கியுள்ளார் க்ரிஷ் நலனி. நிச்சயம் அவரின் முயற்சியில் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடன இயக்குனரின் பங்கும் அளப்பரியது என்பது பாடலைப் பார்க்கும் போது புரிகின்றது.
- நடன அமைப்பு | கலை இயக்கம் – நிவின் டிலக்ஷன்
- ஒளிப்பதிவு – சயேசன் க்ளிக்ஸ்
- படத்தொகுப்பு – ஷாம் டில் ருக்ஷான்
- இசை | வரிகள் | குரல் – ஷமீல்
- இயக்கம் – க்ரீஷ் நலனி
- பாடல் வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்