இன்று அதிகாலை வாகன விபத்தில் உயிரிழந்த வினோகா துரைசிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முகப்புத்தகத்தில் இட்ட பதிவு தான் இது.
தன் தந்தையை இழந்து 11 வருடங்கள் கடந்த நினைவை பதிவு செய்து இருந்தார்.
மிகவும் வேதனையாக உள்ளது.எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கும் வினோகாவின் இந்த இழப்பை தாங்க முடியாத சோகத்தில் அவரது குடும்பத்தார் இருப்பார்கள்.
இந்நேரத்தில் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் .
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மியான்குளம் சந்தியில் அதி வேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளது.
இதில் மட்டக்களப்பு தனியார் பஸ் உரிமையாளரான ஞானசூரியம் சதுக்க வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31) மற்றும் தெஹிவலை ஹோட் வீதியில் வசிக்கும் துரைசிங்கம் (31) வினோகா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் மற்றும் யூடியூப் பிரபலமான மேனாகா சந்துருவின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.