மட்டக்களப்பில் பரிதாபம்! கதறும் குடும்பம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மியான்குளம் சந்தியில் அதி வேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31) மற்றும் தெஹிவலை ஹோட் வீதியில் வசிக்கும் துரைசிங்கம் வினோகா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!