எம்மினம் வீழ்வதா?-கவிதைப் போட்டி

தேடல் கலை இலக்கிய அமைப்பின் கவி உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
இரண்டாம் ஆண்டுவிழாவினை நோக்கிய பயணத்தின் போட்டியாக விருதாளரைத் தேடி எழுச்சிக் கவிதைப் போட்டி.1 ( இரண்டாம் ஆண்டு விழாப் போட்டியல்ல, இரண்டாம் ஆண்டுக்குக்கான விருதாளர் தேர்வுப் போட்டி மட்டுமே)

தலைப்பு: எம்மினம் வீழ்வதா?
காலம்:25-02-2019 தொடக்கம் 02-03-2019 வரை.
சொற்கள்: 80 க்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும்.
நடுவர் : கவிஞர் தேடல்கவி வேலணையூர் ரஜிந்தன்
போட்டி விதிகள்:

• பிறமொழிக் கலப்பு, எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை இன்றி அமைதல் வேண்டும்.
• ஒருவர் ஒரு கவிதை மட்டுமே பதிய வேண்டும்.
• சிறப்புக் கவிதையாக ஒரு கவிதை தெரிவுசெய்யப்பட்டு அக் கவிஞருக்கு கவிநிலா விருதும் வழங்கப் படும்.
• போட்டியில் பதியப் படும் கவிதையை திருத்துவதாகவோ, அல்லது மாற்றுவதாகவோ இருந்தால் போட்டி முடிவடைவதற்கு முன்பு திருத்தம் செய்து கொள்ள முடியும்.
• விதிகளை மீறும் கவிதைகள் போட்டியில் இணைத்துக் கொள்ளப் படமாட்டாது.
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

தேடல் கலை இலக்கிய அமைப்பு.
நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!