வேன் ஒன்றின் கதவு திடீரென திறந்தது மாணவன் மரணம்

பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் பயணித்துக் கொண்டிருந்த பாடாசலை வேன் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதின் காரணமாக கீழே விழுந்து 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!