கோடீஸ்வரனின் இயக்கத்தில் “மாயை மற”

“மாயை மற” (Mayai Mara) 2021 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி திரையரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் குறுந் திரைப்படம் ஆகும். இப்படம் இயக்குநர் கோடீஸ்வரனின் இயக்கத்தில், Visual Art Movies முரளிதரனின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

பத்திற்கு மேற்பட்டோர் புதுமுக நடிகர்களாக அறிமுகமாகும் இப்படத்தில், உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் சரோஷ் அறிமுகமாகின்றார்.

பாடலாசிரியர்களாக விஷ்ணுஜன் மற்றும் நண்பன் லோஜி ஆகியோரும், படத்திற்கான பாடல் மற்றும் பின்னணி இசையமைப்பாளராக கேஷாந்த்தும், பாடகர்களாக குலேந்திரன், கேஷாந்த் மற்றும் யதுஷனா ஆகியோரும், ஒளிப்பதிவு , எடிட்டிங் மற்றும் வர்ணக்கலவை ஆகியவற்றிற்கு அபிஷேக்கும், விளம்பர வடிவமைப்பாளராக டுஜாவும் பணியாற்றி இருக்கின்றனர்.

நடிப்பு • இம்ரான் • கோடீஸ்வரன் • ரெபேக்கா • தினுஷாந்த் • நிகாரிகா • துவாரகா • ஸ்டேபான் • பவித்திரன் • திக்ஷனன் • தினுஷன் • இளங்கோ • பதிபன் • ஜனிதன் • யதுகனன் தயாரிப்பு: இப்படத்தின் தயாரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பாக Visual Art Movies சார்பில் முரளிதரனால் தயாரிக்கப்பட உள்ளது என 2021 ஆம் ஆண்டு தை மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் முதற்பார்வை (First Look) போஸ்ட்டர் தை மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனைத்தெடர்ந்து படத்தின் விளம்பரக் காணொளி (Teaser) தை மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச சினிமா தனித்துவ அடையாளங்களுடனும் தொழில்முறையானதாகவும் வளர வேண்டும் எனும் நோக்கில் இதனை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் வெளியீட்டு நிறுவனத்தினால் மாசி மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இயக்கம்: இப்படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்குநராக கோடீஸ்வரன் பணியாற்றியிருக்கின்றார்.

படக்குழுவினருக்கு
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.

logo
error: Content is protected !!