ஸ்டீபன் வாசகன் தயாரிப்பில் வரவிருக்கும் குறும்படம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு, அகபே கிரியேட்டிவ் தயாரிப்பில் இரண்டாவது பெரிய அளவிலான குறும்படத் திட்டம் 2021 ஜனவரி 20 ஆம் தேதி முடிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இலங்கை பல்வேறு வெற்றிகரமான குறும்படங்களைத் தயாரித்து, இறுதியில் திரைப்படத் துறையில் பல இளம் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.

வரவிருக்கும் இந்த குறும்படம் அதன் பார்வையாளர்களுக்கு மிகவும் யதார்த்தமான மற்றும் பரபரப்பான வழியில் ஒரு வலுவான செய்தியாக அமையும் என்று இயக்குனர் தரப்பில் பேசப்படுகின்றது.

இந்த குறும்படத்தை ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர் ஆர். ஸ்டீபன் வாசகன் மற்றும் ஒளிப்பதிவு எஸ். ஜே. பிரசாத், இசையமைப்பாளர்: கே. ஜுதா தயாரிப்பு மேலாளர்: லவின் பிரிட்டோ, உதவி இயக்குநர்கள்: மெம்ரோய் ஸ்டீவ், ஜே. ஜே. பிரவீன், படப்பிடிப்பு உதவியாளர்: ரெமினாத் அஜய், ஒப்பனை: சதுரா, படப்பிடிப்பாளர் : கயன் சஞ்சீவா, விளம்பரத் தலைவர்: லக்ஷன் இவர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இப்படத்தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அத்தோடு இப்படமானது எம். எஃப் சியா உல் ஹாசன் (விருது பெற்ற தொலைக்காட்சி இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர்) உடன் இனைந்து இப்படத்தலைப்பு பிப்ரவரி 1 ஆம் திகதி வெளியிடப்படவிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!