ஒரு பிரபல தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அதில் பல மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்குபற்றுகிறார்கள். இறுதிப்போட்டிக்கு 4 பேர் தெரிவாகின்றனர். வவுனியா போட்டியாளர், மன்னார் போட்டியாளர், மட்டக்களப்பு போட்டியாளர், நுவரேலியா போட்டியாளர் என அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர் வெற்றிபெற வாக்களியுங்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது. மக்களும் மாங்கு மாங்கு என்று sms அனுப்பி தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளருக்கு வாக்களிக்கின்றனர். இறுதியில் மட்டக்களப்பைச் சேர்ந்த போட்டியாளர் வெற்றிபெறுகிறார்.
பிறகு நம்மட ஆக்களும் “மட்டக்களப்பான் எண்டா சும்மாவா”, “நாங்கதான் கெத்து”, “எங்களுக்கே சவாலா” என போஸ்டுகள் தெறிக்கவிடுகிறார்கள்.
வெற்றி பெற்ற போட்டியாளர் மட்டக்களப்பிற்கு திரும்புகிறார். அவரை வாழ்த்துவதற்காக கூடி இருந்த மக்களில் ஒருவர் அவர் அருகே சென்று “நல்லா வெற்றிபெற்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துட்டிங்க” என்கிறார். அப்போது அந்த போட்டியாளரின் உறவினர் ஒருவர் “நாங்க மட்டக்களப்பில்ல அண்ணன், புதுக்குடியிருப்பு” என்று சொல்கிறார்.
*ஒருவரின் திறமையைக்கொண்டு அவரை மதிப்பிடுவது நல்லது. ஊரின் பெயரைக் குறிப்பிட்டால்த் தான் sms போகும் காசு கிடைக்கும். ‘அது வியாபாரம். நமக்குள்ள என்ன வியாபாரம்’.
இதுதான் எமக்குள் நாம் சேர்த்து வைத்திருக்கும் பிரிவினைவாதம். “சிந்திப்போம் செயற்படுவோம்”
உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள்