தொடர்வோம் productions தயாரிக்கும் “நீ முதல் நான் வரை” திரைப்படத்தின் செய்திகள் வர ஆரம்பித்துள்ளது.
ஊடகவியலாளர் கிருஷ்ணா எழுதி இயக்கும் இத் திரைப்படத்தின் வேலைகள் நாட்டின் சூழல் காரணமாக நகராமல் இருந்தது , இப்போது முழு வீச்சுடன் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
ஜனவரி முதலாம் திகதி படத்தின் முதற் பார்வையும்.அதே நாளில் மோஷன் போஸ்டரும் வெளியீடப்படும் என்று இயக்குனர் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
ஜனவரி 12 அல்லது 14 இசையமைப்பாளர் ஷமீல் இசையமைத்த பாடல்களும் வெளியிட உத்தேசம் இருக்கிறதாம்.
எது எப்படியோ படைப்பு மிக பெரிய வெற்றி பெற நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்